ATPChallenger: ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரானது சீனாவில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் குன்னேஸ்வரன், கொலம்பியாவின் நிக்கோலஸ் பாரியென்டஸை (Nicolás Barrientos) எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை குன்னேஸ்வரன் 6-2 என்ற கணக்கில் நிக்கோலஸிடமிருந்து கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய குன்னேஸ்வரன் இரண்டாவது செட்டையும் 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி நிக்கோலஸுக்கு அதிர்ச்சியளித்தார்.
இதன்மூலம் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் குன்னேஸ்வரன் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் கொலம்பியாவின் நிக்கோலஸ் பாரியென்டஸை வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறிவுள்ளார்.
இதையும் படிங்க: கேப்டன்ஷிப்பும் போச்சு; இப்போ டீம்ல இடமும் போச்சு... 'சர்ஃப்ராஸ் அஹமது'