இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆடவர்களுக்கான ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் தொடங்கியது. உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள டென்னிஸ் வீரர்களுக்காக நடத்தப்படும், இந்தத் தொடரில் வீரர்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே நேற்று ஆண்ட்ரே அகாஸி குரூப்பில் நடைபெற்ற போட்டியில் உலகின் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ்வை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஸ்வெரவ் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி, நடாலுக்கு அதிர்ச்சியளித்தார். பின் தனது ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வெரவ் 6-4 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றி அசத்தினார்.
-
PEAK ALEXANDER ZVEREV!
— ATP Tour (@atptour) November 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
This might just be shot of the tournament 🤯
🎥: @TennisTV | @AlexZverev | #NittoATPFinals pic.twitter.com/e1emNM0hLj
">PEAK ALEXANDER ZVEREV!
— ATP Tour (@atptour) November 11, 2019
This might just be shot of the tournament 🤯
🎥: @TennisTV | @AlexZverev | #NittoATPFinals pic.twitter.com/e1emNM0hLjPEAK ALEXANDER ZVEREV!
— ATP Tour (@atptour) November 11, 2019
This might just be shot of the tournament 🤯
🎥: @TennisTV | @AlexZverev | #NittoATPFinals pic.twitter.com/e1emNM0hLj
இதன் மூலம் அலெக்சாண்டர் ஸ்வெரவ் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் ரஃபேல் நடாலை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் உலகின் நட்சத்திர வீரர்களுக்கு, இளம் வீரர்கள் கடுமையான நெருக்கடியை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: முதல் போட்டியிலேயே தோல்வியடைந்த ஃபெடரர்