ETV Bharat / sports

பட்டாசாய் வெடித்த பட்லர்; பஞ்சு பஞ்சாய் பறந்த ஆஸ்திரேலியா! - டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை தொடரின் ’சூப்பர் 12’ சுற்றுப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.

டி20 உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பை
author img

By

Published : Oct 31, 2021, 7:07 AM IST

Updated : Oct 31, 2021, 9:19 AM IST

துபாய்: ஏழாவது ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முதல் பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (அக். 30) நடைபெற்றது.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் மிகவும் மோசமாக அமைந்தது.

பரிதாபத் தொடக்கம்

கடந்த போட்டியில் அரைசதம் அடித்த வார்னர் இன்றைய போட்டியில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஸ்மித், மேக்ஸ்வேல், ஸ்டாய்னிஸ் ஆகியோர் பெவிலியனை நோக்கி அணிவகுத்தனர். இதனால், ஆஸ்திரேலியா 6.1 ஓவர்களில் 21/4 என மிகவும் பரிதாபகரமான நிலையில் இருந்தது.

மறுமுனையில் கேப்டன் ஃபின்ச் மிகவும் பொறுமைக் காட்டினார். அடுத்த வந்த மத்யூ வேட் 18 ரன்களும், அகார் 20 ரன்களும் எடுத்து ஸ்கோரை சற்று உயர்த்தினர். அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபின்ச் 44 (49) ரன்களில் ஆட்டமிழந்தார்.

பட்லர் அதிரடி

பின்னர், பின்வரிசை பேட்டர்களும் சொதப்ப, ஆஸ்திரேலிய 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களையே எடுத்தது. இங்கிலாந்து சார்பில் ஜோர்டன் 3 விக்கெட்டுகளையும், மில்ஸ், வோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அடில் ரஷித், லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

127 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ராய் - பட்லர் களமிறங்கினர். ராய் சற்று நிதானம் காட்ட பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், பவர்பிளேயில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 66 ரன்களை எடுத்தது.

இதன்பின்னர், ராய் 22 (20), மலான் 8 (8) ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் பட்லர் சிக்சரும், பவுண்டரியாகவும் பறக்கவிட, இங்கிலாந்து அணி 11.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து தனது வெற்றியைப் பதிவுசெய்தது. பட்லர் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 71 ரன்களை குவித்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஸாம்பா, அகார் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோர்டன் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.

50 பந்துகளை மீதம் வைத்து இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், மூன்று வெற்றிகளைப் பெற்று (ரன்ரேட் - +3.948) முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம், இங்கிலாந்து அணியின் அரையிறுதி பயணம் ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: T20 WORLDCUP: மில்லரால் த்ரில் வெற்றிபெற்ற தென் ஆப்பரிக்கா!

Last Updated : Oct 31, 2021, 9:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.