அபுதாபி: டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், இரண்டாவது பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், நமிபியா அணிகள் மோதும் போட்டி இன்று (அக். 31) மாலை நடைபெற்றது.
அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முகமது சஷாத் 45 ரன்களை எடுத்தார். நமிபியா சார்பில் ரூபென், லாஃப்டி ஈட்டன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அசால்ட் காட்டும் ஆப்கன்
161 ரன்கள் எடுத்தால் வெற்றி என நமிபியா அணி களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் நமிபிய பேட்டர்கள் ரன் அடிக்க திணறினார்கள். இதனால், அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம், ஆப்கானிஸ்தான் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.
-
What a career for Asghar Afghan!#T20WorldCup https://t.co/HNKGMe65dv
— T20 World Cup (@T20WorldCup) October 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">What a career for Asghar Afghan!#T20WorldCup https://t.co/HNKGMe65dv
— T20 World Cup (@T20WorldCup) October 31, 2021What a career for Asghar Afghan!#T20WorldCup https://t.co/HNKGMe65dv
— T20 World Cup (@T20WorldCup) October 31, 2021
நமிபிய அணி பேட்டிங்கில் அதிகபட்சமாக டேவிட் வைஸ் 26 ரன்களை எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணியில் நவீன் உல்-ஹக், ஹமித் ஹாசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், குல்புதின் 2 விக்கெட்டுகளையும், ரஷித் கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக நவீன் உல்-ஹக் தேர்வுசெய்யப்பட்டார்.
ஓய்வுபெற்றார் அஸ்கர் ஆப்கன்
ஆப்கன் அணியின் முன்னாள் கேப்டன் இன்றையப் போட்டியோடு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். இப்போட்டியில் அவர் 31 (23) ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: T20 WORLDCUP: இந்தியா பேட்டிங்; அணியில் இஷான், ஷர்துல்