WWE வீரர் தி கிரேட் காளி. இவர் WWEஇன் முன்னாள் வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன் ஆவார். இந்தியாவைச் சேர்ந்த இவருடைய நிஜப்பெயர் தலிப் சிங் ராணா. இவர் ஈடிவி பாரத் ஊடகத்துக்கு பிரத்யேகப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியின்போது, WWE போட்டிகள் ஃபிக்ஸிங் செய்யப்பட்டு விளையாடப்படுகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ' சர்வதேச அளவில் விளையாடப்படும் அனைத்து விளையாட்டுகளும் எங்கேயோ ஃபிக்ஸிங் செய்யப்படுவது தான். அதேபோல் தான் WWE போட்டிகளிலும் ஃபிக்ஸிங் உள்ளது. என்னை இதுவரை பலரும் விளையாட்டின்போது ஃபிக்ஸிங் செய்வதற்காக அணுகியுள்ளனர். ஆனால், ஒருபோதும் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதில்லை.
இந்தியா அரசு அடிமட்ட விளையாட்டு வீரர்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை. கீழ்மட்டத்தில் உள்ள வீரர்களுக்கு அரசு சார்பாக பல்வேறு உதவிகள் செய்ய வேண்டும். அரசு அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கத் தேவையில்லை. அவர்களின் அடிப்படை தேவைகளான ஸ்போர்ட்ஸ் ஷு, உடை, உணவு ஆகியவற்றை செய்து கொடுக்கவேண்டும் ' என்றார்.
இதையும் படிங்க: பளுதூக்குதல் வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை!