ETV Bharat / sports

உலக யூத் செஸ் சாம்பியன் போட்டியில் வாகை சூடிய 14 வயது சிறுவன்! - latest chess news

மும்பை: உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 18 வயது ஓபன் பிரிவில் இந்தியாவின் 14 வயது கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞாநந்தா வென்றுள்ளார்.

சிறுவன்
author img

By

Published : Oct 13, 2019, 2:56 PM IST

உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் மும்பையில் நடைபெற்றது. இதில் 14, 16, 18 வயது பிரிவுகளுக்கு என ஆடவர், மகளிர் என தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. இதில் 18 வயது ஓபன் பிரிவில் இந்தியாவின் 14 வயது கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞாநந்தா கலந்துகொண்டார்.

பிரக்ஞாநந்தா
பிரக்ஞாநந்தா

இந்த போட்டியின் 11ஆவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரக்ஞாநந்தாவை எதிர்த்து ஜெர்மனியின் வேலண்டின் பக்குல்ஸ் ஆடினார். இந்த ஆட்டத்தில் 9 புள்ளிகளுடன் பிரக்ஞாநந்தா ஆட்டத்தை டிரா செய்ய, மற்றொரு வீரரான அர்ஜூன் கல்யாணுடனான போட்டியில் அர்மேனியாவின் ஷாந்த் சர்ஜிஸ்யானுடன் டிரா செய்தார். இதனால் இந்தியாவின் பிரக்ஞாநந்தா தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இதுகுறித்து பிரக்ஞாநந்தா பேசுகையில், ‘14 வயதேயான நான், 18 வயது பிரிவில் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. சீனியர் வீரர்களுடம் செஸ் விளையாட்டில் போட்டிபோடுவது கடினமாக இருந்தாலும், நன்றாக உள்ளது. எனது அடுத்த இலக்காக டெல்லியில் நடைபெறவுள்ள 20 வயதுக்குட்பட்டோருக்கான ஜுனியர் உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்று பட்டம் வெல்ல வேண்டும் என்பதே இலக்கு’ என்றார்.

இந்தியாவின் 14 வயது கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞாநந்தா

இதையும் படிக்கலாமே: ''கண்ணாடியைத் திருப்புனா எப்படிணே வண்டி ஓடும்'' - மீண்டும் பயிற்சியாளரை மாற்றிய கிங்ஸ் லெவன் அணி!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.