ETV Bharat / sports

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் - உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கப்பதக்கம் வென்றார்.

இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன்
இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன்
author img

By

Published : May 20, 2022, 7:21 AM IST

இஸ்தான்புல்லில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 52 கிலோ எடைப் பரிவின் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தாய்லாந்தின் ஜித்போங் ஜுதாமஸ்ஸை எதிர்கொண்டார்.

இதில் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்திய நிகாத் ஜரீன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம், சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்லும் 5ஆவது வீராங்கனை என்ற பெருமையை நிகாத் ஜரீன் பெற்றுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு மேரி கோம் 48 கிலோ எடைப்பரிவில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.