இந்தியாவில் நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நான்கு பேரை காவல் துரையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்ற சம்பவம் இந்திய மக்களிடையே பெறும் வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றது.
இந்நிலையில், இந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்து குத்துச்சண்டை உலகச்சாம்பியனும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், இந்திய பெண்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'சில நேரங்களில் இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் நம் நாட்டில் பாலியல் தொடர்பான செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இது போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பெண்களின் பாதுகாப்பிற்காக, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு கலைகளை கற்க ஊக்குவிக்க வேண்டும். பெண்கள் குத்துச்சண்டை, கராத்தே ஆகிய தற்காப்பு கலைகளை கற்பதன் மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கமல்ஹாசனை சந்தித்த சிஎஸ்கே வீரர்!