லண்டன்: டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நேற்று முன்தினம் (ஜூன் 27) தொடங்கின. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று (ஜூன் 28) நடந்த முதல் சுற்று போட்டியில், உலகின் நான்காம் நிலை வீரர் ரஃபேல் நடால், 42ஆவது நிலை வீரரான பிரான்சிஸ்கோ செருண்டோலோ உடன் மோதினார்.
-
Up and running at #Wimbledon 2022 🇪🇸@RafaelNadal overcomes a stern Centre Court test from Francisco Cerundolo#CentreCourt100 pic.twitter.com/qt6b7t9bCF
— Wimbledon (@Wimbledon) June 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Up and running at #Wimbledon 2022 🇪🇸@RafaelNadal overcomes a stern Centre Court test from Francisco Cerundolo#CentreCourt100 pic.twitter.com/qt6b7t9bCF
— Wimbledon (@Wimbledon) June 28, 2022Up and running at #Wimbledon 2022 🇪🇸@RafaelNadal overcomes a stern Centre Court test from Francisco Cerundolo#CentreCourt100 pic.twitter.com/qt6b7t9bCF
— Wimbledon (@Wimbledon) June 28, 2022
ஆட்டத்தின் முதல் இரண்டு செட்டுகளை (6-4, 6-3) அடுத்தடுத்து வென்ற நடால், மூன்றாவது செட்டை பிரான்சிஸ்கோவிடம் (3-6) பறிகொடுத்தார். இருப்பினும், தொடர்ந்து ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், கடும் போட்டிக்கு மத்தியில் நான்காவது செட்டை வென்று (6-4) ஆசத்தினார். இதன்மூலம், 3-1 என்ற கணக்கில் பிரான்சிஸ்கோவை வீழ்த்தி, தொடரில் நடால் தனது முதல் வெற்றியை பதிவுசெய்தார்.
-
Delightfully deft from @RafaelNadal 👌#Wimbledon | #CentreCourt100 pic.twitter.com/3xYB2mRh6M
— Wimbledon (@Wimbledon) June 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Delightfully deft from @RafaelNadal 👌#Wimbledon | #CentreCourt100 pic.twitter.com/3xYB2mRh6M
— Wimbledon (@Wimbledon) June 28, 2022Delightfully deft from @RafaelNadal 👌#Wimbledon | #CentreCourt100 pic.twitter.com/3xYB2mRh6M
— Wimbledon (@Wimbledon) June 28, 2022
ஆஸ்திரலிய ஓபன், பிரஞ்சு ஓபன் என அடுத்தடுத்து இரு கிராண்ட்ஸ்லாமை கைப்பற்றியுள்ள நடால், விம்பிள்டன் தொடரிலும் ஆதிக்கத்தை செலுத்தும் முனைப்பில் உள்ளார். நடால் தனது இரண்டாவது சுற்றுப்போட்டியில், லிதுவேனியன் வீரர் ரிகார்தாஸ் பெரான்கிஸ் உடன் நாளை (ஜூன் 30) மோத உள்ளார்.
-
"That's absolutely sensational!"@RafaelNadal picks up @HSBC_Sport Play of the Day for this Centre Court magic 🎩#Wimbledon | #CentreCourt100 pic.twitter.com/R3YICIu02P
— Wimbledon (@Wimbledon) June 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">"That's absolutely sensational!"@RafaelNadal picks up @HSBC_Sport Play of the Day for this Centre Court magic 🎩#Wimbledon | #CentreCourt100 pic.twitter.com/R3YICIu02P
— Wimbledon (@Wimbledon) June 28, 2022"That's absolutely sensational!"@RafaelNadal picks up @HSBC_Sport Play of the Day for this Centre Court magic 🎩#Wimbledon | #CentreCourt100 pic.twitter.com/R3YICIu02P
— Wimbledon (@Wimbledon) June 28, 2022
இதையும் படிங்க: விம்பிள்டன் டென்னிஸ் பரிசுத்தொகை அதிகரிப்பு! சாம்பியனுக்கு ரூ 19.25 கோடி பரிசு அறிவிப்பு