டெல்லி : ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டி செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் இந்திய அணியை செஸ் மேஸ்ட்ரோ விஸ்வநாதன் ஆனந்த் வழிநடத்துகிறார்.
2021 FIDE ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் என்பது உலகளாவிய ஆன்லைன் போட்டியாகும். இதில் 100க்கும் மேற்பட்ட வெவ்வேறு தேசிய அணிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று தங்கத்திற்காக போட்டியிடுவார்கள்.
இதில், இந்திய அணியில் ஆனந்த், பி ஹரிகிருஷ்ணா, நிஹால் சரின், ஆர் பிரகானந்தா, கோனேரு ஹம்பி, டி ஹரிகா, விடித் சந்தோஷ், தனியா சச்தேவ், பக்தி குல்கர்னி, ஆர் வைஷாலி, அதிபன் பாஸ்கரன், பி சவிதா ஸ்ரீ ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதுதொடர்பாக, செஸ்.காம் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில், “அதிபன் பாஸ்கரனும் இந்திய அணியில் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக நாங்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அவரது பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டதற்கு மன்னிப்பு கோருகிறோம். இந்தியாவுக்கு நல்வாழ்த்துகள் "என பதிவிட்டிருந்தனர்.
அகில இந்திய செஸ் கூட்டமைப்பானது முன்னாள் தேசிய சாம்பியன், பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் வென்ற கிராண்ட் மாஸ்டர் அபிஜித் குன்டே அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் போட்டியில், விளையாடும் பத்து அணிகளில் இருந்து இரண்டு அணிகள் தகுதிபெறும். அதன்பிறகு இரண்டு அணிகளுக்கு நாக் அவுட் சுற்று நடத்தப்பட்டு FIDE உச்ச செஸ் அமைப்பால் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: