இந்திய அணியின் நட்சத்திர குத்துச்சண்டை வீரராக வலம் வந்தவர் விஜேந்திர சிங். இவர் 2008ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக வெண்கலப்பதக்கம் வென்றவர். இதன் மூலம் ஒலிம்பிக் குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவிற்காக பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
பின்னர் 2015ஆம் ஆண்டு முதல் தொழில் முறை குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்றுவரும் விஜேந்திர சிங், தற்போது துபாயின் சீசர்ஸ் பிளேஸ் புளுவாட்டர்ஸில் நடைபெற்ற போட்டியில் கானா(Ghana) நாட்டின் சார்லஸ் ஆடமை வீழ்த்தி, தொழில் முறை குத்துச்சண்டையில் தொடர்ச்சியாக 12 முறை வெற்றியைப் பெற்று சாதனைப்படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக 7 முறை தொழில்முறை குத்துச்சண்டை போட்டியின் நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை விஜேந்திர சிங் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈடன் கார்டனில் எனக்கு பிடித்தமான பல நினைவுகள் உள்ளன - ஹர்பஜன் சிங்