2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடர் கரோனா பரவல் காரணமாக அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் தொடருக்கான ஆயத்தப் பணிகளை ஒலிம்பிக் அமைப்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது ஒலிம்பிக் அமைப்பாளர்கள் குழுவில் உள்ள இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அமைப்பாளர்கள் குழுவில் உள்ளவர்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு 20 வயது என்றும், மற்றொருவருக்கு 30 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிக்கப்பட்டுள்ளதால் இவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஒலிம்பிக் அமைப்பாளர்கள் குழுவில் மூவாயிரத்து 500 பேர் பணி செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் வீட்டிலிருந்தே பணி செய்து வருகிறார்கள்.
இதனிடையே ஜப்பான் அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''கரோனா தீவிரமாகப் பரவிவருகிறது. முக்கியமாக தலைநகர் டோக்கியோவில் உள்ள மக்கள் எங்கும் பயணிக்க வேண்டாம். உணவகங்கள், மது அருந்தும் விடுதிகள் ஆகிய இடங்களுக்குச் செல்ல வேண்டாம்'' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஓய்வை அறிவித்தார் சீனாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரர் லின் டான்