கரோனா வைரசின் அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், இந்தாண்டு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் ஜப்பானின் விளையாட்டு ஆராய்ச்சி ஆணையத்துடனான சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் பேசிய டோக்கியோ 2020 அமைப்பின் தலைவர் யோஷிரோ மோரி, கரோனா சூழல் எப்படி இருந்தாலும் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய யோஷிரோ மோரி, “கரோனா பெருந்தொற்றைப் பொருட்படுத்தாமல் ஒலிம்பிக்கை நடத்துவதற்கான புதிய வழிகளை நாங்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.
இதில் விவாதம் எப்படி நடக்கும் என்பதில் அல்ல, போட்டியை எவ்வாறு நடத்துவது என்பதில்தான் இருக்க வேண்டும். அதற்காக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் நெருக்கமாகப் பணியாற்றிவருகிறோம். புதிய ஒலிம்பிக் போட்டியுடன் நாம் மீண்டுவர வேண்டும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) தலைவர் தாமஸ் பேச், "திட்டமிட்டபடி டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைப் பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்த நாங்கள் உழைத்துவருகிறோம்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என் பயோபிக் உருவாகிறதா?- யார்க்கர் நடராஜனின் பதில்!