ETV Bharat / sports

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சோதனைப் போட்டிகள்: ஒலிம்பிக் நிர்வாகம் - சோதனைப் போட்டிகள்

2021ஆம் ஆண்டு தொடக்கத்தில் சோதனைப் போட்டிகள் நடத்தப்படும் என ஒலிம்பிக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tokyo-olympic-officials-talk-of-test-events-early-next-year

author img

By

Published : Nov 10, 2020, 10:09 PM IST

டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர்கள் ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்கான அமைப்பாளர்களை சந்தித்து பேசியபோது, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சோதனை நிகழ்வுகளை நடத்தத் தயாராக இருப்பதாக ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை டோக்கியோவில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் 22 ரஷ்ய, அமெரிக்க, சீன விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். அதில் சில ஆயிரம் பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

இதைப்பற்றி டோக்கியோ ஒலிம்பிக்கின் விநியோக அலுவலர் ஹிடேமாசா நகாமுரா, மார்ச் மாதத்தில் தொடங்கி மேலும் சில சோதனை நிகழ்வுகளுக்கான திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், இவை எந்த வடிவத்தை எடுக்கக்கூடும் அல்லது ஜப்பானியரல்லாத விளையாட்டு வீரர்கள் ஈடுபடுவார்களா என்பது தெரியவில்லை.

ஜப்பான் அரசு, டோக்கியோ பெருமாநகராட்சி ஆகியோர் ஒன்றிணைந்து கரோனா வைரசை எப்படி அனைவரும் எதிர்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். அடுத்த வருட தொடக்கத்தில் சில விஷயங்களை செயல்படுத்துவோம். மார்ச் மாதத்தில் சில சோதனை நடவடிக்கைகள் நடத்தப்படும்.

டோக்கியோவுக்கு வரும் ஜிம்னாஸ்டிக் வீரர்கள் முதலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். டோக்கியோவில் தனிமைப்படுத்துவதற்காகவே சில ஹோட்டல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. நடக்கவுள்ள ஒலிம்பிக்கில் 206நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள். அதற்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடுவர்கள், பயிற்சியாளர்கள், ஒளிபரப்பாளர்கள், ஸ்பாஸ்சர்ஸ், விஐபிக்கள் என பங்கேற்கவுள்ளார்கள்.

அதேபோல் பாரா ஒலிம்பிக் தொடரில் 4 ஆயிரத்து 400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள். அதேபோல் எந்த அளவிற்கு பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என்று உறுதியாக கூற முடியாது. கரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி சோதனைகள் நம்பிக்கையளிக்கிறது'' என்றார்.

இதையும் படிங்க: ’கோலி இல்லைனா என்ன... மேட்ச் பட்டாசா இருக்கும்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.