தோஹா: மொராக்கோவிற்கு எதிரான புதன்கிழமை 2-0 என்ற அரையிறுதி வெற்றிக்குப் பிறகு பிரான்ஸ் கால்பந்து அணியின் கோல்கீப்பரும் கேப்டனுமான ஹியுகோ லோரிஸ், தங்கள் அணி ஞாயிறன்று அர்ஜென்டினாவுடன் விளையாடும் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி தனது முதல் உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் விளையாடுவார்.
அதேநேரத்தில் பிரான்ஸ் அணி தான் 2018இல் வென்ற சாம்பியன் பட்டத்தை மீட்டெடுக்க போராடுவர் என்பதால் இறுதி போட்டி மிகவும் கடினமானதாக அமையும் என கூறினார்.
மேலும் "அர்ஜென்டினா மிகவும் சிறந்த அணியாகும். அவர்கள் எவ்வளவு செயல்திறன் கொண்டவர்கள் என்பதை அவர்கள் காட்டியுள்ளனர், மேலும் இந்த விளையாட்டில் முத்திரையைப் பதித்த மெஸ்ஸி அவர்களிடம் இருக்கிறார். ஆனால் நாங்கள் ஆட்டத்தினை எங்கள் வழியில் மாற்ற முயற்சிப்போம். நாங்கள் சோர்வாக இருந்தாலும் ஆனால் திருப்தி அடைகிறோம்.
ஏனென்றால் பிரான்ஸ் நாட்டுக்கு வரலாறு படைக்க ஒரு பொன்னான வாய்ப்பை எங்களுக்கு நாங்களே ஏற்படுத்தி கொண்டோம். நான்கு ஆண்டுகளில் எங்களுக்கு இரண்டாவது இறுதிப் போட்டி, எல்லாம் சரியாக இல்லாவிட்டாலும், நாளை முதல் நாங்கள் மீளத் தொடங்க வேண்டும்” என லோரிஸ் கூறினார்.
இதையும் படிங்க: FIFA World Cup: மொராக்கோ vs பிரான்ஸ் அரையிறுதிப் போட்டியின் முழு விவரம்