தாஷ்கண்ட்: உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டில் உலக ஆணழகன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 47 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில், ஜூனியர் பிரிவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட தமிழ்நாட்டு வீரர் சுரேஷ் தங்கப்பதக்கத்தை வென்று உலக ஆணழகன் பட்டத்தை தட்டிச்சென்றார்.
கலக்கும் தமிழர்கள்
அதே பிரிவில் போட்டியிட்ட மற்றொரு தமிழ்நாட்டு வீரர் விக்னேஷ் வெண்கலம் வென்றார். முன்னதாக, சீனியர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாட்டு வீரர் பெஞ்சமின் ஜெரால்டு வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: IPL 2021: டெல்லி அணிக்கு 137 ரன்கள் இலக்கு; ராயுடு அரைசதம்