ETV Bharat / sports

#Rugbyworldcup: இன்று தொடங்குகிறது காலிறுதிச்சுற்று - வெல்வது யார்? - நியூசிலாந்து - ஐயர்லாந்து- இரண்டாவது காலிறுதிப்போட்டி

டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ரக்பி தொடரின் முதலாவது மற்றும் இரண்டாவது காலிறுதிச்சுற்று போட்டிகள் இன்று தொடங்கவுள்ளன.

#Rugbyworldcup
author img

By

Published : Oct 14, 2019, 7:25 AM IST

#Rugbyworldcup: இந்தாண்டிற்கான உலகக்கோப்பை ரக்பி தொடர் ஜப்பான் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது. 20 அணிகள் பங்கு பெற்ற இந்தத் தொடர் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என நான்கு குழுவாகப் பிரிந்து லீக் ஆட்டங்களில் மோதின.

தற்போது இத்தொடரின் லீக் ஆட்டங்கள் முடிந்து ஒவ்வொரு குரூப்பிலிருந்தும் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன. அந்த வகையில் ,

  • குரூப் ஏ- ஜப்பான், ஐயர்லாந்து
  • குரூப் பி- நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா
  • குரூப் சி- இங்கிலாந்து, பிரான்சு
  • குரூப் டி- வேல்ஸ், ஆஸ்திரேலியா,

ஆகிய எட்டு அணிகள் உலகக்கோப்பை ரக்பி தொடரின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று இத்தொடரின் முதல் மற்றும் இரண்டாவது காலிறுதிப் போட்டிகள் தொடங்குகிறது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா- முதலாவது காலிறுதிப்போட்டி

இந்த காலிறுதிச்சுற்றின் முதல் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி, குரூப் டி பிரிவின் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இந்த உலகக்கோப்பை ரக்பி தொடரில் லீக் ஆட்டங்களில் மூன்று வெற்றி, ஒரு தோல்வி என சமநிலையான பலத்துடன் இருப்பதினால் காலிறுதியில் யார் வெற்றி பெறுவார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

நியூசிலாந்து - ஐயர்லாந்து- இரண்டாவது காலிறுதிப்போட்டி

அதேபோல் இன்று நடைபெறும் மற்றொரு உலகக்கோப்பை ரக்பி தொடரின் காலிறுதி ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியனான நியூசிலாந்து அணி, குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஐயர்லாந்து அணியை எதிர் கொள்ளவிருக்கிறது.

இவ்விரு அணிகளுமே இத்தொடரின் லீக் ஆட்டங்களில் மூன்று வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளன. இருப்பினும் நியூசிலாந்து அணி இத்தொடரில் பெற்ற மூன்று வெற்றிகளையுமே எதிரணியை எளிதில் வீழ்த்தி பெற்றதாகும். ஆனால், ஐயர்லாந்து அணியைப் பொறுத்த வரையில் அனைத்து லீக் ஆட்டங்களிலும் கடுமையானச் சூழலை சமாளித்த பின்பு தான் வெற்றியை ருசித்தது.

இதனால் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான காலிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி வெல்வதற்கே அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் பட்டாளம் தெரிவிக்கின்றது.

இதையும் படிங்க: முகுந்த், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் அசத்தல்; ம.பி. மிரட்டிய தமிழ்நாடு!

Intro:Body:

Rugby world cup quarter final

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.