ETV Bharat / sports

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் மாநில சிறப்பு விளையாட்டு மையங்கள் : மத்திய அரசு

புது டெல்லி : முதல் கட்டமாக எட்டு இடங்களில் கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்களை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தொடங்கவுள்ளது.

author img

By

Published : Jun 16, 2020, 7:38 PM IST

sports-ministry-to-establish-kisce-to-create-a-robust-sporting-ecosystem

இந்தியா முழுவதும், விளையாட்டிற்கான வலுவான சூழலை உருவாக்கும் முயற்சியில் அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் ஒரு கேலோ இந்தியா மாநில சிறப்பு மையத்தை அடையாளம் காண மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக கர்நாடகா, ஒடிசா, கேரளா, தெலங்கானா, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து ஆகிய எட்டு மாநிலங்களில் அரசுக்கு சொந்தமான விளையாட்டு வசதிகளை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. இவையனைத்தும் கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்களாக மேம்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

2019ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள உட்கட்டமைப்பு, கடந்த சில ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சாம்பியன் வீரர்கள் ஆகியவைகளைக் கணக்கில் கொண்டு பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த கேலோ இந்தியா சிறப்பு மையங்களை நிர்வகிக்கும் பொறுப்பினை மாநிலங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் விளையாட்டு நிபுணர்கள், பயிற்சியாளர்கள், உதவி ஊழியர்கள் ஆகியோரை நியமிக்கும் பொறுப்பை மத்திய அமைச்சகம் பொறுப்பேற்கும்.

இது குறித்து மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜ்ஜு பேசுகையில், "ஒலிம்பிக்கில் சிறந்து விளங்குவதற்கான இந்தியாவின் முயற்சியை வலுப்படுத்துவதற்காகவே, கேலோ மாநில சிறப்பு மையத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் கிடைக்கும் சிறந்த விளையாட்டு வசதிகளை கல்விக் கூடங்களாக அளவிடுவதே எங்கள் முயற்சி.

அரசாங்கத்தின் தீவிரமான பகுப்பாய்விற்குப் பிறகு விளையாட்டு வசதிகள் உள்ள மாநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நாடு முழுவதிலுமிருந்து திறமையானவர்களை அடையாளம் காணவும், நாட்டிற்காக பதக்கங்களை வெல்லக்கூடிய விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியளிக்கவும் இந்தத் திட்டம் உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் " எனத் தெரிவித்தார்.

முதல் கட்டமாக மேம்படுத்தப்படவுள்ள விளையாட்டு அகாடமிகள்: சாங்கே லேடன் ஸ்போர்ட்ஸ் அகாடமி, இட்டா நகர், அருணாச்சல பிரதேசம், ஜெய்பிரகாஷ் நாராயண் தேசிய இளைஞர் மையம், பெங்களூரு, கர்நாடகா, ஜி.வி.ராஜா சீனியர் மேல்நிலைப் விளையாட்டுப் பள்ளி, திருவனந்தபுரம், கேரளா, குமன் லம்பக் விளையாட்டு வளாகம், இம்பால், மணிப்பூர், ராஜீவ் காந்தி ஸ்டேடியம், ஐஸ்வால், மிசோரம், மாநில விளையாட்டு அகாடமி, ஐ.ஜி ஸ்டேடியம், கோஹிமா, நாகாலாந்து, கலிங்க ஸ்டேடியம், புவனேஷ்வர், ஒடிசா.

இதையும் படிங்க : மகளிர் கிரிக்கெட் அணிக்காக பவர் யோகாவை வகுப்பு எடுக்கும் சிஏபி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.