இந்தியாவில் இளம் வீரர்களை ஊக்குவிக்கும்வகையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2018ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
அந்தவகையில், இம்முறை முதல்முறையாக குளிர்கால கேலோ போட்டி இன்று ஜம்மு காஷ்மீரிலுள்ள குல்மார்க் மாவட்டத்தில் தொடங்கியது. இந்தத் தொடர் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துடன் இணைந்து ஜம்மு காஷ்மீர் விளையாட்டு கவுன்சில் நடத்துகிறது.
இதனை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். இன்று முதல் ஐந்து நாள்கள் வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில் ஐஸ் ஹாக்கி, ஸ்கேட்டிங் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த 900 தடகள வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதையும் படிங்க: கொரோனோவால் உலகக்கோப்பை தொடர் ஒத்திவைப்பு