உலக பாரா அத்லெடிக் கிராண்ட் பிரிக்ஸ் விளையாட்டு போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் 100 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியா சார்பில் சிம்ரன் யாதவ் பங்கேற்றார்.
இலக்கை 12.74 விநாடிகளில் எட்டிய சிம்ரன் யாதவ் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். முன்னதாக 2019ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற சீனா கிராண்ட் பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றிருந்தார்.
அதேபோல் வட்டு எறிதல் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற நீரஜ் யாதவ் 35.49 மீட்டர் தூரம் வட்டு எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார். ஆடவர் நீளம் தாண்டுதல் பிரிவில் பிரவீன் குமார் 5.95 மீ தாண்டி வெள்ளிப்பதக்கத்தையும், பிரதீப் 5.73 மீ தாண்டி வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர். மகளிர் ஈட்டி எறிதலில் பாக்யஸ்ரீ மகாவீர் ஜாதவ் 11.36 மீ ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் உலக அத்லெடிக் கிராண்ட் பிரிக்ஸ் விளையாட்டு போட்டிகளில் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது.
இதையும் படிங்க: சதமடித்து மிரட்டிய ரிஸ்வான்; பரபரப்பான அட்டத்தில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி!