ETV Bharat / sports

தங்கம் வென்று அசத்திய சவுரப் சவுத்ரி! - சவுரப் சவுத்ரி சாதனை

போபாலில் நடைபெற்றுவரும் 63ஆவது தேசிய துப்பாக்கிச் சுடுதல் தொடரில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் சவுரப் சவுத்ரி ஆடவர் தனிநபர் 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

Saurabh Chaudhary
Saurabh Chaudhary
author img

By

Published : Jan 5, 2020, 2:58 PM IST

63ஆவது தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் தனிநபர் பிரிவுக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவு தகுதிச் சுற்றுப் போட்டியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது நட்சத்திர வீரர் சவுரப் சவுத்ரி 583 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

இதையடுத்து நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய சவுரப் சவுத்ரி 246.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். அவரைத் தொடர்ந்து 24.39 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடம்பிடித்த ஹரியானாவின் சரப்ஜித் சிங்கிற்கு வெள்ளிப் பதக்கமும், அதே மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் வர்மா 221.1 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரில் சவுரப் சவுத்ரி 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.

இதையும் படிங்க: ஓய்வை அறிவித்த ஹாட்ரிக் நாயகன் இர்பான் பதான்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.