ETV Bharat / sports

ஃபிடே உலக கோப்பை செஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா!

FIDE World Cup Chess: ஃபிடே உலக கோப்பை செஸ் தொடரின் கால் இறுதி போட்டியில் சக இந்திய வீரரான அர்ஜுன் எரிகைசியை வீழ்த்தி பிரக்ஞானந்தா அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

author img

By

Published : Aug 18, 2023, 12:48 PM IST

பிரக்ஞானந்தா
praggnanandhaa

பாகு: ஃபிடே உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி கடந்த ஜூலை 24ஆம் தேதி தொடங்கி வருகிற 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

இத்தொடரின் கால் இறுதிப் போட்டியில் டி குகேஷ், விதித் குஜாரத்தி, கார்ல்சன் மற்றும் நிஜாத் அபாசோவிடம் தோல்வியடைந்தனர். மற்றொரு கால் இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா சக இந்திய வீரரான அர்ஜுன் எரிகைசியுடன் மோதினார். இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த பின்னர், புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். இதன் மூலம் ஸ்கோர் 1.0-1.0 என்று ஆனது.

இதையும் படிங்க: ஃபிடே செஸ் உலக கோப்பை: குகேஷை விழ்த்திய கார்ல்சன்!

வெற்றியாளரை முடிவு செய்ய டை பிரேக்கருக்கு சென்றது. இதன் மூலம் நடைபெற்ற முதல் இரு ஆட்டம் டிரா ஆனது. அடுத்த இரு ஆட்டங்களில் இருவரும் மாறி மாறி வெற்றி பெற ஸ்கோர் 3.0-3.0 என ஆனது. பின்னர் மூன்றாவது மற்றும் நான்காவது ஆட்டத்தில் இருவரும் தலா ஒரு வெற்றி பெற 4.0-4.0 என்ற சமநிலை எட்டினர்.

அடுத்ததாக சடன் டெத் முறையில் ஆட்டம் நடைபெற்றது. இதில் வெள்ளை காய்களை கொண்டு அற்புதமாக விளையாடி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். இதனையடுத்து 5.0-4.0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

இதன் மூலம் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்க வீரர் ஃபேபியானோ கருவானாவுக்கு எதிராக பிரக்ஞானந்தா விளையாட உள்ளார். மேலும், உலக கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதியில் நுழைந்த 2வது வீரர் என்ற சாதனையையும் பிரக்ஞானந்தா படைத்து உள்ளார்.

இதையும் படிங்க: 4வது வரிசையில் விராட் கோலி களமிறங்க வேண்டும் - ரவி சாஸ்திரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.