ETV Bharat / sports

#PKL2019: தொடர் தோல்விகளை சந்தித்துவரும் தமிழ் தலைவாஸ்!

கொல்கத்தா: நடைபெற்றுவரும் புரோ கபடி லீக்கின் நேற்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 50-34 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லியிடம் தோல்வியைத் தழுவியது.

dabang delhi
author img

By

Published : Sep 9, 2019, 1:14 PM IST

Updated : Sep 9, 2019, 1:36 PM IST

2019ஆம் ஆண்டிற்கான புரோ கபடி தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வருகின்றன. இத்தொடரின் 80ஆவது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலுள்ள தபாங் டெல்லி அணி 11ஆவது இடத்திலுள்ள தமிழ் தலைவாஸை நேற்று எதிர்கொண்டது.

meraj sheykh
அற்புத ஆட்டத்தை வெளிப்படுத்தும் மிராஜ் ஷேக்

முழுக்க முழுக்க ரெய்டர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே டெல்லியின் கை ஓங்கி இருந்தது. ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி ஆல் அவுட் ஆக 11-5 என்ற புள்ளிகள் கணக்கில் டெல்லி முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய டெல்லி அணி 24-12 என்ற புள்ளிகள் கணக்கில் தொடர்ந்து முன்னிலை வகித்தது.

rahul chaudhary
ராகுல் சௌத்ரி

அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லியின் நவீன் குமார் வழக்கம் போல 'சூப்பர் 10' எடுத்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நவீன் குமார் - மிராஜ் ஷேக் இணையால் இரண்டாவது பாதியின் 3ஆவது நிமிடத்திலேயே மீண்டும் ஒரு முறை ஆல்-ஆவுட் ஆனது தமிழ் தலைவாஸ். தமிழ் தலைவாஸின் ராகுல் சௌத்ரி - அஜீத் குமார் இணை ரெய்டிங்கில் புள்ளிகளைக் குவித்த போதும், டிஃபண்டிங்கில் சுமாரான ஆட்டத்தைக் கூட தமிழ் தலைவாஸ் வெளிப்படுத்தவில்லை.

Dabang Delhi
மஞ்சீத் சில்லரை மடக்கி பிடிக்கும் டெல்லி வீரர்கள்

இதன் காரணமாக 50-34 என்ற புள்ளிகள் கணக்கில் டெல்லி அணி, தமிழ் தலைவாஸ் அணியை வீழ்தியது. மொத்தம் எடுக்கப்பட்ட 34 புள்ளிகளில் 3 புள்ளிகள் மட்டுமே டிஃபண்டிங்கில் தமிழ்தலைவாஸ் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 42-39 என்ற புள்ளிகள் கணக்கில் புனேரி பால்தான் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
Last Updated : Sep 9, 2019, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.