ETV Bharat / sports

நூறாவது பிறந்தநாளை கொண்டாடும் ஒலிம்பிக் சாம்பியன்!

author img

By

Published : Jan 9, 2021, 2:37 PM IST

உலகின் மிக அதிக வயதான ஒலிம்பிக் சாம்பியனான ஹங்கேரியின் ஆக்னஸ் கெலெட்டி இன்று (ஜன.09) தனது 100ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

Oldest living Olympic champion celebrates her 100th birthday

உலகின் மிக அதிக வயதான ஒலிம்பிக் வீராங்கனையாக அறியப்படுபவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆக்னஸ் கெலெட்டி. 1921ஆம் ஆண்டு ஹங்கேரியாவின் புத்தாபெஸ்ட் நகரில் பிறந்த கெலெட்டி, இரண்டாம் உலகப்போர் காரணமாக 1941 மற்றும் 1944ஆம் ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.

அதன்பின் 1948ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் அறிமுகமாக இருந்த கெலெட்டி, காயம் காரணமாக அதிலிருந்து விலகினார். பின்னர் 1952ஆம் ஆண்டு பின்லாந்தில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தனது 30ஆவது வயதில் அறிமுகமானார்.

அந்த ஒலிம்பிக் தொடரில் கெலெட்டி ஜிம்னாஸ்டிக் பிரிவில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என நான்கு பதக்கங்களைப் பெற்று சாதனைப் படைத்தார். அதையடுத்து 1956ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு தங்கம், இரண்டு வெள்ளிப்பதக்கங்களை கைப்பற்றி சாதித்தார்.

மேலும் அப்போது 35 வயதான கெலெட்டி, ஜிம்னாஸ்டிக்ஸ் வரலாற்றில் மிக அதிக வயதில் தங்கப் பதக்கம் வென்றவர் என்ற பெருமையையும் பெற்றார். இதன் காரணமாக கெலெட்டிக்கு 1981ஆம் ஆண்டு சர்வதேச ஜெவிஸ் ஆல் ஆஃப் ஃபேம் (International Jewish Sports Hall of Fame) விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

நூறாவது பிறந்தநாளை கொண்டாடும் ஒலிம்பிக் சாம்பியன்

இந்நிலையில் ஆக்னஸ் கெலெட்டி இன்று தனது 100ஆவது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கொண்டாடி வருகிறார். 100 வயதை எட்டிய கெலெட்டிக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளன.

இதையும் படிங்க: IND vs AUS: காயமடைந்த ரிஷப்; களத்தில் இறங்கிய சஹா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.