இந்த ஆண்டிற்கான உலகக்கோப்பை ரக்பி தொடர் ஜப்பான் நாட்டில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள சமோவா அணி ரஷ்ய அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சமோவா அணி ரஷ்ய அணியின் அனைத்து வியூகங்களையும் உடைத்தெறிந்தது. ஆட்ட நேர முடிவில் சமோவா அணி 34-09 என்ற புள்ளிக்கணக்கில் ரஷ்ய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
-
Crowd loves the Siva Tau! @SamoaRugby deliver the first Siva Tau of #RWC2019 against Russia pic.twitter.com/vS1EAPVhL0
— Rugby World Cup (@rugbyworldcup) September 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Crowd loves the Siva Tau! @SamoaRugby deliver the first Siva Tau of #RWC2019 against Russia pic.twitter.com/vS1EAPVhL0
— Rugby World Cup (@rugbyworldcup) September 24, 2019Crowd loves the Siva Tau! @SamoaRugby deliver the first Siva Tau of #RWC2019 against Russia pic.twitter.com/vS1EAPVhL0
— Rugby World Cup (@rugbyworldcup) September 24, 2019
இந்த வெற்றியின் மூலம் சமோவா அணி உலகக்கோப்பை ரக்பி தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் குரூப் ஏ புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கும் முன்னேறிவுள்ளது. ரஷ்யா அணி இந்தத் தொடரில் பங்குபெற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து குரூப் ஏ பட்டியலில் புள்ளிகள் ஏதுமின்றி கடைசி இடத்தில் நீடிக்கிறது.
இதையும் படிங்க: #rugbyworldcup2019: சர்ச்சையில் கிடைத்த வேல்ஸ் அணியின் வெற்றி!