உலகக்கோப்பை ரக்பி தொடர் ஜப்பான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள பிரான்ஸ் அணி அமெரிக்க அணியை எதிர் கொண்டது.
ஏற்கனவே பிரான்ஸ் அணி இத்தொடரில் பங்கேற்ற முதல் போட்டியில் அர்ஜென்டினா அணியை 23-21 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வென்றது. ஆனால் அமெரிக்க அணி தனது முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணியிடம் 45-07 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியைத் தழுவியது.
-
FT at #RWCFukuoka @FranceRugby 🇫🇷 defeat @USARugby 🇺🇸 in Pool C #RWC2019 #FRAvUSA pic.twitter.com/bGwpCuhONL
— Rugby World Cup (@rugbyworldcup) October 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">FT at #RWCFukuoka @FranceRugby 🇫🇷 defeat @USARugby 🇺🇸 in Pool C #RWC2019 #FRAvUSA pic.twitter.com/bGwpCuhONL
— Rugby World Cup (@rugbyworldcup) October 2, 2019FT at #RWCFukuoka @FranceRugby 🇫🇷 defeat @USARugby 🇺🇸 in Pool C #RWC2019 #FRAvUSA pic.twitter.com/bGwpCuhONL
— Rugby World Cup (@rugbyworldcup) October 2, 2019
இதனால் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்த போட்டியில் ஆரம்பம் முதலே பிரான்ஸ் அணி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அமெரிக்க அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.
ஆட்ட நேர முடிவில் பிரான்ஸ் அணி 33-09 என்ற புள்ளிக்கணக்கில் அமெரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பிரான்ஸ் அணி 10 புள்ளிகளுடன் குரூப் சி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
இதையும் படிங்க: #WorldAthleticsChampionship: போங்கு ஆட்டத்தை எதிர்த்து போராடியதால் பைனலுக்குச் சென்ற இந்திய வீரர்