உலகக்கோப்பை ரக்பி தொடர் ஜப்பான் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி அமெரிக்க அணியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி அமெரிக்க அணியின் அனைத்து வியூகங்களையும் உடைத்தெறிந்தது.
-
HIGHLIGHTS: @englandrugby score seven against @usarugby at Rugby World Cup 2019 in their second pool match of the tournament #RWC2019 #ENGvUSA pic.twitter.com/jLFgkLpIAa
— Rugby World Cup (@rugbyworldcup) September 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">HIGHLIGHTS: @englandrugby score seven against @usarugby at Rugby World Cup 2019 in their second pool match of the tournament #RWC2019 #ENGvUSA pic.twitter.com/jLFgkLpIAa
— Rugby World Cup (@rugbyworldcup) September 26, 2019HIGHLIGHTS: @englandrugby score seven against @usarugby at Rugby World Cup 2019 in their second pool match of the tournament #RWC2019 #ENGvUSA pic.twitter.com/jLFgkLpIAa
— Rugby World Cup (@rugbyworldcup) September 26, 2019
அதன் பின் தனது ஆக்ரோஷமான இயல்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 45-07 என்ற புள்ளிக்கணக்கில் அமெரிக்க அணியை வீழ்த்தி, இத்தொடரின் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி உலகக்கோப்பை ரக்பி தொடரின் குரூப் சி பிரிவில், 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது. அமெரிக்க அணி, இத்தொடரின் தனது முதல் ஆட்டத்திலேயே படுதோல்வியடைந்து, குரூப் சி பிரிவில் புள்ளிகள் ஏதுமின்றி, பட்டியலின் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #RugbyWorldCup: போய் வீட்டில பெரியவங்க இருந்தா கூடிட்டி வா போ... கனடாவை பந்தாடிய இத்தாலி!