இந்தாண்டிற்கான புரோ கபடி லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 119ஆவது லீக் போட்டியில் புனேரி பால்தன் அணி தெலுகு டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் அட்டாக், டிஃபென்ஸ் என இரு பிரிவுகளிலும் சம பலத்துடன் மோதிக்கொண்டனர். இருந்தாலும் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் புனேரி பால்தன் அணி 31-16 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது.
அதன்பின் தொடர்ந்த ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஆக்ரோஷமா விளையாடி தெலுகு அணி தனது புள்ளிக்கணக்கை உயர்த்த தொடங்கியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக புனேரி அணியும் அவர்களை வீழ்த்தும் முனைப்பில் அதிரடி காட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.
-
A 100+ POINT THRILLER FT. @PuneriPaltan and @Telugu_Titans!
— ProKabaddi (@ProKabaddi) October 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
The #BhaariPaltan just about held on to their lead to end the Titans' #VIVOProKabaddi Playoff hopes!
Watch all the kabaddi action:
⏳: Every day, 7 PM
📺: Star Sports and Hotstar#IsseToughKuchNahi #HYDvPUN pic.twitter.com/gIHLliU70y
">A 100+ POINT THRILLER FT. @PuneriPaltan and @Telugu_Titans!
— ProKabaddi (@ProKabaddi) October 3, 2019
The #BhaariPaltan just about held on to their lead to end the Titans' #VIVOProKabaddi Playoff hopes!
Watch all the kabaddi action:
⏳: Every day, 7 PM
📺: Star Sports and Hotstar#IsseToughKuchNahi #HYDvPUN pic.twitter.com/gIHLliU70yA 100+ POINT THRILLER FT. @PuneriPaltan and @Telugu_Titans!
— ProKabaddi (@ProKabaddi) October 3, 2019
The #BhaariPaltan just about held on to their lead to end the Titans' #VIVOProKabaddi Playoff hopes!
Watch all the kabaddi action:
⏳: Every day, 7 PM
📺: Star Sports and Hotstar#IsseToughKuchNahi #HYDvPUN pic.twitter.com/gIHLliU70y
இறுதியில் இப்போட்டியை யார் வெல்லுவார்கள் என்ற ரசிகர்களின் பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புனேரி பால்தன் அணி 53-50 என்ற புள்ளிகள் அடிப்படையில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
புனேரி பால்தன் அணியின் ராகேஷ் கௌடா 17 ரெய்டுகளில் 16 புள்ளிகளைப் பெற்று அணியை வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் ராகேஷ் கௌடா இந்த போட்டியின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: சேவாக் - கம்பீரின் சாதனையை தகர்த்த ரோஹித் - மயாங்க் இணை