ETV Bharat / sports

#FIVBWorldcup: அமெரிக்காவுக்கு அதிர்ச்சியளித்த சீனா...! - புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

author img

By

Published : Sep 23, 2019, 3:01 PM IST

ஹமாமாட்சூ: மகளிர் உலகக்கோப்பை கைப்பந்து தொடரின் ஏழாவது லீக் சுற்றில் நடப்பு சாம்பியனான சீனா அணி 3-0 என்ற செட் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.

#FIVBWorldcup

ஜப்பானின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக்கோப்பை கைப்பந்து தொடரின் நடப்புச் சாம்பியானான சீனாவும் பலம் பொருந்திய அமெரிக்காவும் மோதின.

இப்போட்டியில் சீனா தனது வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் டிங் ஷு (Ting Zhu) தனது அட்டாக் (தாக்குதல்) திறமையால் எதிரணியை மிரளவைத்தார். இதனால் மிரண்டுபோன அமெரிக்க அணி, சீன அணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்தது.

She’s amazing, and not only a terrific hitter, but also a tremendous blocker!
Ting Zhu is everywhere! 😲
🇨🇳 vs 🇺🇸

LIVE matches & replays on https://t.co/RQp8h559wa
Info 👉 https://t.co/qYqciGEAq3#Volleyball #InGame pic.twitter.com/qYjvZk4le1

— Volleyball World (@FIVBVolleyball) September 23, 2019 ">

இதனை சரியாகப் பயன்படுத்திய சீனா 25-16, 25-17, 25-22 என்ற நேர்செட் கணக்கில் அமெரிக்காவை திகைக்க வைத்தது. இதன்மூலம் மகளிர் உலகக்கோப்பைத் தொடரின் ஏழாவது லீக் ஆட்டத்தில் சீனா அணி 3-0 என்ற செட் கணக்குகளில் வலிமை மிகுந்த அமெரிக்க அணியை வீழ்த்தியது.

சீன அணி தொடர்ந்து விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் 20 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. அமெரிக்காவை பொறுத்தவரையில் ஏழு போட்டிகளில் பங்கேற்று ஆறு போட்டிகளில் வெற்றியும் இன்றைய போட்டியில் தோல்வியையும் தழுவி 17 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கின்றது.

ஜப்பானின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக்கோப்பை கைப்பந்து தொடரின் நடப்புச் சாம்பியானான சீனாவும் பலம் பொருந்திய அமெரிக்காவும் மோதின.

இப்போட்டியில் சீனா தனது வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் டிங் ஷு (Ting Zhu) தனது அட்டாக் (தாக்குதல்) திறமையால் எதிரணியை மிரளவைத்தார். இதனால் மிரண்டுபோன அமெரிக்க அணி, சீன அணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்தது.

இதனை சரியாகப் பயன்படுத்திய சீனா 25-16, 25-17, 25-22 என்ற நேர்செட் கணக்கில் அமெரிக்காவை திகைக்க வைத்தது. இதன்மூலம் மகளிர் உலகக்கோப்பைத் தொடரின் ஏழாவது லீக் ஆட்டத்தில் சீனா அணி 3-0 என்ற செட் கணக்குகளில் வலிமை மிகுந்த அமெரிக்க அணியை வீழ்த்தியது.

சீன அணி தொடர்ந்து விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் 20 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. அமெரிக்காவை பொறுத்தவரையில் ஏழு போட்டிகளில் பங்கேற்று ஆறு போட்டிகளில் வெற்றியும் இன்றைய போட்டியில் தோல்வியையும் தழுவி 17 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கின்றது.

Intro:Body:

World cup Volley Ball held at Japan

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.