ETV Bharat / sports

AUS Open 2022: துள்ளிக் குதிக்கும் நடால்; பைனலுக்கு முன்னேற்றம்! - ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பைனலில் நடால்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் மேட்டியோ பெரெட்டினியை 1-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ரஃபேல் நடால் ஆறாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளார்.

NADAL INTO AUSSIE OPEN FINAL
NADAL INTO AUSSIE OPEN FINAL
author img

By

Published : Jan 28, 2022, 4:07 PM IST

மெல்போர்ன்: 2022ஆம் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப்போட்டி இன்று (ஜன. 28) நடைபெற்றது. இப்போட்டியில், 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றுள்ள ஸ்பெய்ன் வீரர் ரஃபேல் நடால், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி உடன் மோதினார்.

வெறித்தனம் காட்டிய நடால்

35 வயதான நடால், முதல் செட்டிலேயே தனது இயல்பான அதிவேக ஷாட்கள் மூலம் புள்ளிகளை பெற்று, செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது செட்டை 6-2 என கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

இன்னும் ஒரு செட்டை கைப்பற்றினால் வெற்றி என்ற போது, மூன்றாவது செட்டை மேட்டியோ 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி, ஆட்டத்தை நான்காவது செட்டிற்கு அழைத்துச் சென்றார்.

ஆனால், இம்முறை நடால் மீண்டெழுந்து 6-3 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றியது மட்டுமில்லாமல், 3-1 என்ற செட் கணக்கில் போட்டியையும் வென்றார். இதன்மூலம், ரஃபேல் நடால் ஆறாவது முறையாக ஆஸ்திரேலியா ஓபன் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.

கிடைக்குமா 21ஆவது பட்டம்?

இதுவரை டென்னிஸின் ஓபன் எராவில் (Open Era), ரோஜர் ஃபெடரர், நோவாக் ஜோகோவிச், ரஃபேல் நடால் ஆகியோர் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர்.

இதனால், இந்த ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும்பட்சத்தில் 21ஆவது கிராண்ட் ஸ்லாம் கைப்பற்றும் முதல் வீரர் என்ற பெருமையை நடால் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Australian Open title: நோவக் ஜோகோவிச் வெளியேற ஆஸ்திரேலியா உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.