சண்டிகர்: இந்திய தடகள ஜாம்பவான் மில்கா சிங் (91) கரோனா தொற்று பாதிப்பால் நேற்றிரவு (ஜூன் 18) காலமானார். தடகளத்தில் உலகளவில் இந்தியாவிற்கு பல பதக்கங்களையும், பெருமையையும் பெற்று தந்தவர் மில்கா சிங்.
'பறக்கும் சீக்கியர்' என்றழைக்கப்பட்ட மில்கா சிங் அவர்களின் மறைவிற்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தும், அவரின் சாதனையை சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.
மில்கா சிங் அவர்களின் இறுதிச் சடங்கு சண்டிகரில் அரசு மரியாதையுடன் இன்று மாலை நடைபெற்றது. அவருக்கு நடந்த இறுதி சடங்கில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைந்தளவிலான பொதுமக்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.