ETV Bharat / sports

Asian Champions Trophy: மலேசியாவை வீழ்த்திய சீனா.. டிராவில் முடிந்த இந்தியா - ஜப்பான் ஆட்டம் - தென்கொரியா

ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில், மலேசியா சீனாவை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான போட்டியும், தென்கொரியா, பாகிஸ்தான் இடையேயான போட்டியும் டிராவில் முடிந்தன.

ஹாக்கி 2023
hockey 2023
author img

By

Published : Aug 5, 2023, 7:31 AM IST

சென்னை: ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் 7-வது எடிஷன் சென்னையில் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 03) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா, தென்கொரியா, மலேசியா உள்ளிட்ட 6 அணிகள் விளையாடுகின்றன.

போட்டியின் 2-வது நாளான நேற்று (ஆகஸ்ட் 04) இந்தியா, ஜப்பான் ஆகிய அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் இரண்டு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தன. மொத்தம் நான்கு பகுதிகளாக நடைபெற்ற போட்டியில் முதல் பகுதியில் இரு அணிகளும் எந்த வெற்றி புள்ளிகளையும் பெறவில்லை. இரண்டாவது பகுதியில் 28-வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் வீரர் நாகயோஷி பெனால்டி கார்னர் நேரத்தில் கோல் அடித்தார்.

இதனையடுத்து, 1-0 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பான் அணி முன்னிலை வகித்தது. மூன்றாவது பகுதியின் 43-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் பெனால்டி கார்னர் நேரத்தில் கோல் அடித்தார். இதனால் இரண்டு அணிகளும் 1-1 பள்ளி கணக்கில் சம நிலையில் இருந்தது. நான்காவது சுற்றில் இரண்டு அணிகளும் கோல் அடிப்பதற்காக கடுமையாக விளையாடினர். ஆனால் இரு அணிகளும் சமபலத்தால் மோதியதால் முன்னிலை பெற வாய்ப்பு இல்லாமல் போனது. இறுதியில் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

தென்கொரியா - பாகிஸ்தான்: நடப்பு சாம்பியனான தென்கொரியா பாகிஸ்தானுடன் மோதியது. இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது. முந்தய ஆட்டத்தில் மலேசியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்புடன் விளையாடியது. 18-ஆவது நிமிடத்தில் அப்துல் ஷாஹித் ஃபீல்டு கோல் அடித்தார். அதன் பின் இரு அணிகளும் கடுமையாக மோதியன. மூன்றாவது பகுதியில் இரு அணிகளும் கடுமையாக மோதிய நிலையில் 53-நிமிடத்தில் கொரியாவைச் சேர்ந்த ஜிஹுன் யாங் கோல் அடித்து ஸ்கோரை சமன் செய்தார். இதனால் ஆடம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

மலேசியா - சீனா: மற்றோறு ஆட்டத்தில் மலேசியா சீனா இடையேயான போட்டியில் 1-5 புள்ளிக் கணக்கில் சீனாவை வீழ்த்தி மலேசியா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மலேசியா அணி தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலேயே சீனா அணி கோல் அடித்தது. அந்த கோலை சென் சோங்கோங் 4-வது நிமிடத்தில் கோலடித்தார். அதன் பின் சுதாரித்த மலேசியா அணி தனது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தது.

இதனை தொடர்ந்து 11-வது நிமிடத்தில் ஃபைசல் சாரியும், 15-வது நிமிடத்தில் அபுகமல் அஸ்ராயும், 45, 49-வது நிமிடத்தில் ஃபிர்ஹான் அஷாரியும், 57-வது நிமிடத்தில் நஜ்மி ஜஸ்லானும் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இறுதியாக 1-5 புள்ளிக் கணக்கில் சீனாவை வீழ்த்தி மலேசியா அணி வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டங்களில் சீனா - தென்கொரியா மோதுகின்றன. இந்த ஆட்டம் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. அதனை தொடர்ந்து பாகிஸ்தான் - ஜப்பான் ஆட்டம் மாலை 6.15 மணிக்கும், மலேசியா - இந்தியா ஆட்டம் இரவு 8 மணிக்கும் சந்திக்கின்றன.

இதையும் படிங்க: கிராண்ட் மாஸ்டர் குகேஷ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.