கோலாலம்பூர் (மலேசியா): மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இன்று (ஜூலை 7) நடந்த போட்டியில் சீன வீராங்கனை ஜாங் யிமானை வீழ்த்தி இந்தியாவின் பி.வி சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில், பி.வி சிந்து சீன வீராங்கனை ஜாங் யிமானை எதிர்கொண்டார். 28 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-12, 21-10 என்ற நேர்செட் கணக்கில் சீன வீராங்கனையை தோற்கடித்தார். இதன் மூலம் சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.
தொடர்ந்து, ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரணீத் தோல்வியைத் தழுவி போட்டியிலிருந்து வெளியேறினார். சீனாவின் லி ஷிஃபெங்கிடம் 21-14, 21-17 என்ற செட் கணக்கில் பிரணீத் தோல்வியடைந்தார். இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஹெச்.எஸ் பிரணாய் தைவான் வீரரை எதிர்கொள்கிறார்.
இதையும் படிங்க: ENG VS IND: பட்லரின் படையை போட்டுத்தாக்குமா ரோஹித் & கோ - இன்று முதல் டி20