மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் 'கேலோ' இந்தியா மழைக்காலப் போட்டிகள் முதல்முறையாக ஜம்மு காஷ்மீரில் நடந்து வருகிறது. பனியில் விளையாடும் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளித்து போட்டிகள் நடந்துவரும் நிலையில், ஸ்னோ போர்டிங் பயிற்சியாளர் ஃபர்ஹாத் நாயக் நமது ஈ டிவி பாரத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், ஜம்மு - காஷ்மீரில் ஸ்கையிங் விளையாட்டு பல்வேறு தரப்பினர் மத்தியில் மிகவும் பிரபலம். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான வீரர்கள் தேசிய அளவிலான ஸ்கையிங் போட்டிகளில் பங்கேற்கின்றனர். ஆனால், சில வீரர்கள் ஸ்னோ போர்டிங் விளையாட்டில் மிகவும் தீவிரமாகப் பயிற்சிபெற்று வருகின்றனர்.
தற்போது மத்திய அரசின் சார்பாக நடத்தப்படும் 'கேலோ' இந்தியப் போட்டிகளால் ஸ்னோ போர்டிங் பலரது மத்தியில் எளிதாக சென்றடையும்.
இதனால் இளைஞர்கள் பலரும் ஸ்னோ போர்டிங் கற்க ஆர்வமாக வருவார்கள் என நம்புகிறேன். ஆனால் அதற்கு இன்னும் சில ஆண்டுகள் தேவை. இதுபோன்ற விளையாட்டுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். தேவையான அடிப்படை உபகரணங்கள், வசதிகள் என அனைத்தும் செய்யப்படவேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: ஐஎஸ்எல்: இறுதிப்போட்டியோடு ஆண்ட்ரே ஸ்கெம்ப்ரி ஓய்வு