கவுஹாத்தி: 131ஆவது டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி மேற்குவங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. அஸ்ஸாம் மாநிலம், கவுஹாத்தியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் இன்று(ஆக.31) நடைபெற்ற குரூப் டி ஆட்டத்தில், கேரள பிளாஸ்டர்ஸ் மற்றும் ஆர்மி கிரீன் அணிகள் மோதின.
இதில், 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்மி கிரீன் அணியை வீழ்த்தி, கேரள பிளாஸ்டர்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேறியது. ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய முஹம்மது அய்மென் மற்றும் அரித்ரா தாஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இதையும் படிங்க:Asia Cup 2022: வங்கதேசத்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்; 'பி' பிரிவில் முதலிடம்!