கோலாலம்பூர்: ஜூனியர் ஹாக்கியின் 13வது உலகக் கோப்பை தொடர் கடந்த 5ஆம் தேதி மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில், 16 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியின் தலா 3 லீக் போட்டிகள் விளையாட வேண்டும்.
லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறும். இதில், இந்திய அணி 'சி' பிரிவில் உள்ளது. இந்திய அணி கடந்த போட்டியில் ஸ்பெயின் அணியிடம் 1-4 என்ற கணக்கில் அபார தோல்வியை அடைந்தது.
-
Witness the finesse of our Junior Men's Hockey🏑 team, calling it a perfect weekend for us 🥳
— SAI Media (@Media_SAI) December 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Dominating the field, Team 🇮🇳 clinched a resounding 10-1 victory against 🇨🇦 at the #FIHHockey Men's Junior World Cup Malaysia 2023 🤗
With this, team 🇮🇳 alongside Team 🇪🇸 advanced to… pic.twitter.com/FKTV18hTZJ
">Witness the finesse of our Junior Men's Hockey🏑 team, calling it a perfect weekend for us 🥳
— SAI Media (@Media_SAI) December 9, 2023
Dominating the field, Team 🇮🇳 clinched a resounding 10-1 victory against 🇨🇦 at the #FIHHockey Men's Junior World Cup Malaysia 2023 🤗
With this, team 🇮🇳 alongside Team 🇪🇸 advanced to… pic.twitter.com/FKTV18hTZJWitness the finesse of our Junior Men's Hockey🏑 team, calling it a perfect weekend for us 🥳
— SAI Media (@Media_SAI) December 9, 2023
Dominating the field, Team 🇮🇳 clinched a resounding 10-1 victory against 🇨🇦 at the #FIHHockey Men's Junior World Cup Malaysia 2023 🤗
With this, team 🇮🇳 alongside Team 🇪🇸 advanced to… pic.twitter.com/FKTV18hTZJ
இந்நிலையில், இந்திய அணி லீக் போட்டியின் கடைசி ஆட்டமாக இன்று (டிச.09) கனடா அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்திய அணியின் சார்பில் லாலாகே ஆதித்யா அர்ஜுன், ரோகித், லக்ரா அமந்தீப் ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர்.
அதேபோல், உத்தம் சிங், குஷ்வாஹா சௌரப் ஆனந்த், ராஜீந்தர் சிங் மற்றும் விஷ்ணுகாந்த் சிங் ஆகியோர் தலா 1 கோல்கள் அடித்தனர். இதனால் இந்திய அணி 10 கோல்களை அடித்து அசத்தியது. எதிர்த்து ஆடிய கனடா அணி ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் 1 கோல் மட்டுமே அடித்தது.
ஆட்ட நேர முடிவில் 10-1 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. மேலும், முன்னதாக நடைபெற்ற ஸ்பெயின் - கொரிய இடையேயான போட்டியில் 8-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி அபார பெற்றது. மற்றொரு ஆட்டமான நெதர்லாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முன்னாள் கால்பந்து வீரர் ஓலே குன்னர் சோல்ஸ்கேர் இந்தியச் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு..!