பி.எஸ்.ஏ. உலக மகளிர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் எகிப்தில் நடைபெற்றுவருகின்றன. இதில் இந்தியா சார்பில் களமிறங்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான எகிப்தின் நூர் எல் ஷெர்பினியை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஷெர்பினி, முதல் செட்டை 11-05 என்ற கணக்கில் கைப்பற்றி ஜோஷ்னாவிற்கு அதிர்ச்சியளித்தார். அதனைத் தொடர்ந்தும் சிறப்பாக விளையாடிவந்த ஷெர்பினி, ஜோஷ்னாவின் வெற்றிக் கனவை உடைத்தார்.
ஆட்டநேர முடிவில் மும்முறை உலகச்சாம்பியனான நூர் எல் ஷெர்பினி, 11-05, 11-03, 11-06 என்ற செட் கணக்குகளில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பாவை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறிவுள்ளார்.
-
A quick finish for @noursherbini as she moves into the quarters ....
— World Squash Champs by SquashSite (@WCsquash) October 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
[2] Nour El Sherbini (Egy) 3-0 [12] Joshna Chinappa (Ind) 11-5, 11-3, 11-6 (21m) pic.twitter.com/fyx9sif2A0
">A quick finish for @noursherbini as she moves into the quarters ....
— World Squash Champs by SquashSite (@WCsquash) October 28, 2019
[2] Nour El Sherbini (Egy) 3-0 [12] Joshna Chinappa (Ind) 11-5, 11-3, 11-6 (21m) pic.twitter.com/fyx9sif2A0A quick finish for @noursherbini as she moves into the quarters ....
— World Squash Champs by SquashSite (@WCsquash) October 28, 2019
[2] Nour El Sherbini (Egy) 3-0 [12] Joshna Chinappa (Ind) 11-5, 11-3, 11-6 (21m) pic.twitter.com/fyx9sif2A0
இத்தோல்வியின் மூலம் ஜோஷ்னா சின்னப்பா, உலக மகளிர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து வெளியேறினார். இவர் ஷெர்பினியிடம் தோற்பது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலக மகளிர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் ஜோஷ்னா சின்னப்பா