நியூயார்க்: டென்னிஸ் விளையாட்டில் மிகவும் பிரபலமானது அமெரிக்க ஓபன் தொடர். இந்த தொடரில் பல டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளனர். இந்த அமெரிக்க ஓபன் தொடரில் மனநலம் பற்றிய குழுவில் ஜப்பான் நாட்டின் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா இடம்பெற்றுள்ளார். ஒரு வருடத்திற்கு பிறகு இந்த குழுவில் இவர் இடம் பெற்றுள்ளார்.
இது குறித்து நவோமி ஒசாகா பேசுகையில் “எனக்கு இங்கு மீண்டும் வருவது மகிழ்ச்சியை தருகிறது. இங்கு பல்வேறு விஷயங்களை நினைவுபடுத்துகிறது. நான் இங்கு நிறைய கண்ணீர் சிந்தியுள்ளேன். பழைய நண்பனை பல நாட்களுக்கு பின் பார்ப்பது போன்ற உணர்வினை தருகிறது” என கூறினார்.
இந்த கூட்டத்தில் அமெரிக்க பிரபல நீச்சல் வீரரும், 23 முறை ஒலிம்பிக் தங்கப்பதக்கம் பெற்றவருமான மைக்கெல் ஃபெல்ப்ஸ் மற்றும் அமெரிக்க பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் ஜெனரல் விவேக் மூர்த்தி உள்ளிட்டோர் தனிமை, மற்றவர்களுடன் பழகுவது, சமூகவலைதளத்தில் மனநலம் பங்காற்றும் விதம், குழந்தை வளர்ப்பு ஆகியவை குறித்து விவாதித்தனர்.
ஜப்பானில் பிறந்த 25 வயதான ஒசாகா தனது 3வது வயதில் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார். சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அவர் செப்டம்பர் 2022க்கு பிறகு எந்த தொடரிலும் பங்கேற்கவில்லை. ஒசாகா அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் விளையாட முனைப்பு காட்டி வருகிறார்.
இது குறித்து ஒசாகா கூறுகையில் “நான் இதுவரை ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் விளையாடாமல் இருந்ததில்லை. இந்த வருடம் விளையாடாமல் இருந்தது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. நான் முதலில் செரினா வீனஸ் வில்லியம்ஸ் வயதில் விளையாட முடியுமா என யோசித்தேன். ஆனால் தற்போது எனக்கு நம்பிக்கை வந்துள்ளது” என கூறினார்.
முன்னதாக மன அழுத்தத்தினால் 2021 பிரெஞ்ச் ஓபன் தொடரிலிருந்து ஒசாகா விலகினார். பின்னர் தன் மனநலம் பாதுகாக்க டென்னிஸ் விளையாட்டிலிருந்து சில காலம் விலகி இருந்தார். தான் 3 வயதிலிருந்து டென்னிஸ் விளையாடி வருவதாகவும், டென்னிஸ் விளையாடாமல் இருந்த காலத்தில் இந்த விளையாட்டின் மேல் அதிக பற்று ஏற்பட்டுள்ளதாக கூறினார். மெக்கெல் ஃபெல்ப்ஸும் தான் மனநலம் பாதிக்கபட்ட காலத்தில் நடந்தது பற்றி கூறினார்.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கோவிட் இல்லை; G20 மாநாட்டிற்கு இந்தியா புறப்படுகிறார் - வெள்ளை மாளிகை