ETV Bharat / sports

காமன்வெல்த் 2022: இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு வெண்கலம் - வெண்கலப் பதக்கத்தை வென்றது

காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் ஹாக்கியில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய மகளிர் அணி வெண்கலம் வென்றது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 7, 2022, 5:46 PM IST

பர்மிங்காம்: இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2022 நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் இந்தியா நேற்றைய நிலவரப்படி, 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என்று 40 பதக்கங்களை பெற்றுள்ளது. இன்றும் இந்திய வீரர், வீராங்கனைகள் பதங்களை குவித்துவருகிறது.

அந்த வகையில், மகளிருக்கான ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகித்தன. இதையடுத்து, ஷூட் அவுட் முறை நடத்தப்பட்டதில் 2 - 1 என்ற கணக்கில் இந்தியா அணி வெண்கலம் வென்றது. இந்த பதக்கம் கடந்த 16 ஆண்டுகளில் ஹாக்கியில் பெற்ற முதல் பதக்கமாகும்.

முன்னதாக ஆடவர் டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியா வீரர்கள் இடோஸ் பால் மற்றும் அப்துல்லா அபுபக்கர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் இடோஸ் பால் தங்கமும், அப்துல்லா அபுபக்கர் வெள்ளியும் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி வெண்கலம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.