தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இந்த ஆண்டுக்கான ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், கலப்பு இரட்டையர் ரீகர்வ் பிரிவுக்கான வெண்கலப் பதக்க போட்டி இன்று நடைபெற்றது.
இதில், பங்கேற்ற இந்தியாவின் தீபிகா குமாரி- அடானு தாஸ் ஜோடி சீனாவின் யிசாய் ஹெங் - சவுசான் வெய் (Yichai Zheng - Shaoxuan Wei) இணையை 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
இதேபோல் நடைபெற்ற கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா - ஜோதி சுரேக்கா 159-154 என்ற கணக்கில் தென் கொரிய இணையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. நாளை மறுநாள் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய ஜோடி, சீனதைபை இணையுடன் தங்கப் பதக்கத்துக்காக மோதவுள்ளது.
-
The pair of @VJSurekha and @archer_abhishek reached the mixed team compound final at the Asian Archery C’ships. They will play Chinese Taipei for gold on Wednesday.
— SAIMedia (@Media_SAI) November 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Best Wishes.#KheloIndia@KirenRijiju @DGSAI @RijijuOffice @IndiaSports @PIB_India @PMOIndia @ddsportschannel pic.twitter.com/lE7OaaD3bt
">The pair of @VJSurekha and @archer_abhishek reached the mixed team compound final at the Asian Archery C’ships. They will play Chinese Taipei for gold on Wednesday.
— SAIMedia (@Media_SAI) November 25, 2019
Best Wishes.#KheloIndia@KirenRijiju @DGSAI @RijijuOffice @IndiaSports @PIB_India @PMOIndia @ddsportschannel pic.twitter.com/lE7OaaD3btThe pair of @VJSurekha and @archer_abhishek reached the mixed team compound final at the Asian Archery C’ships. They will play Chinese Taipei for gold on Wednesday.
— SAIMedia (@Media_SAI) November 25, 2019
Best Wishes.#KheloIndia@KirenRijiju @DGSAI @RijijuOffice @IndiaSports @PIB_India @PMOIndia @ddsportschannel pic.twitter.com/lE7OaaD3bt
அதேசமயம், அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றுக்கான போட்டியிலும் இந்திய வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.