13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாள் தலைநகர் காத்மண்டு, போக்ரஹாவில் நடைபெற்றுவருகின்றன. இதில், பளூதூக்குதல் பிரிவுக்கான போட்டிகள் நேற்று நடைபெற்றன. மகளிர் 45 கிஎலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜிலி தாலாபேரா ஸ்னாட்ச் (66 கி.கி) க்ளின் அண்ட் ஜெர்க் முறை (85 கி.கி) என மொத்தம் 151 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அவருக்கு அடுத்தப்படியாக இலங்கை வீராங்கனை திவ்சேகரா சமராகூன் ஸ்ரீமாலி 139 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கமும், நேபாளத்தைச் சேர்ந்த சங்கீதா ராய் 127 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
இதேபோல, மகளிர் 49 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சினேகா சொரன் ஸ்னாட்ச் (68 கி.கி) க்ளின் அண்ட் ஜெர்க் (89 கி.கி) என 157 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார். இதில், வெள்ளிப் பதக்கம் 155 எடையை தூக்கிய இலங்கையின் கோமஸ் ஹன்சானிக்கும், வெண்கலப் பதக்கம் 130 கிலோ எடை தூக்கிய வங்கதேச வீராங்கனை ஷபிரா மோலாவிற்கும் கிடைத்தது.
-
Update:
— SAIMedia (@Media_SAI) December 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
With 12 medals in Wushu and 11 in Swimming, India have moved to 124 medals in the medal tally at the South Asian Games. This includes 62 gold medals. #SAG2019 #KheloIndia@KirenRijiju @DGSAI @RijijuOffice @IndiaSports @PIB_India @PMOIndia @ddsportschannel https://t.co/E8nwyC18lr pic.twitter.com/EG4FjRgpIt
">Update:
— SAIMedia (@Media_SAI) December 5, 2019
With 12 medals in Wushu and 11 in Swimming, India have moved to 124 medals in the medal tally at the South Asian Games. This includes 62 gold medals. #SAG2019 #KheloIndia@KirenRijiju @DGSAI @RijijuOffice @IndiaSports @PIB_India @PMOIndia @ddsportschannel https://t.co/E8nwyC18lr pic.twitter.com/EG4FjRgpItUpdate:
— SAIMedia (@Media_SAI) December 5, 2019
With 12 medals in Wushu and 11 in Swimming, India have moved to 124 medals in the medal tally at the South Asian Games. This includes 62 gold medals. #SAG2019 #KheloIndia@KirenRijiju @DGSAI @RijijuOffice @IndiaSports @PIB_India @PMOIndia @ddsportschannel https://t.co/E8nwyC18lr pic.twitter.com/EG4FjRgpIt
இதேபோல, மகளிர் 55 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பிந்தியாரானி தேவி 181 எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். இதையடுத்து, நடைபெற்ற ஆடவர் 61 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீரர் சித்தாந்த் கோகாய் 264 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார். பளூதூக்குதல் பிரிவில் இந்திய வீரர்கள் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம், இதுவரை 62 தங்கம், 41 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 124 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
இதையும் படிங்க:தெற்காசிய போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா