ஒடிசாவில் உள்ள கட்டாக் நகரில் 21ஆவது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஜூலை 17 முதல் நேற்று (ஜூலை 22) வரை நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்திய வீரர் ஹர்மீத் தேசாய், சக வீரரான சதியன் ஞானசேகரனை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஹர்மீத் தேசாய் 9-11, 6-11, 11-5, 11-8, 17-5, 7-11, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இதேபோல், மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் அயிகா முகர்ஜீ (Ayhika Mukherjee), சக வீராங்கனையான மாதுரிகா பட்கருடன் மோதினார்.
இதில், அயிகா 11-6, 11-4, 11-9, 19-17 என்ற செட் கணக்கில் மாதுரிகாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதன்மூலம், இந்தியா இந்தத் தொடரில், 7 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை குவித்து அசத்தியுள்ளது.