2020ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா யூத் கேம்ஸ் போட்டிகள் கவுகாத்தியில் நடக்கிறது. இதில் கடந்த ஆண்டு முதலிடம் பிடித்த மகாராஷ்டிரா மாநிலம், இந்த ஆண்டு 71 பதக்கங்களுடமன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
இந்த ஆண்டில் பல்வேறு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட ஹரியானா அணி 47 பதக்கங்களில் 17 தங்கப் பதக்கங்களுடனும், 17 வெள்ளிப்பதக்கங்களுடனும் பெற்றதால் முதலிடம் பிடித்தது. மகாராஷ்டிரா அணி 16 தங்கம், 20 வெள்ளியுடன் இரண்டாம் இடம் பிடித்தது.
தமிழ்நாடு வீரர்கள் தடகளத்தில் அசத்தி 5 தங்கப்பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர். நீளம் தாண்டுதலில் சரண், போல்வால்ட் போட்டியில் பவித்ரா, பெண்களுக்கான ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் பாபிஷா ஆகியோர் தங்கப்பதக்கங்களை வென்றனர். மொத்தமாக தமிழ்நாடு அணி 8 தங்கப்பதக்கத்துடன் சேர்த்து 25 பதக்கங்களைக் கைப்பற்றி ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. டெல்லி, குஜராத் ஆகிய அணிகள் முறையே மூன்றாவது, நான்காவது இடங்களைப் பிடித்தன.
இதையும் படிங்க: கங்குலியை டான்ஸ் ஆடவைத்த ஹர்பஜன்!