ETV Bharat / sports

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் தோல்வி - ஜெர்மன் ஓபன் பேட்மிண்டனில் சாய்னா நேவால்

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்தார்.

german-open-saina-nehwal-loses-to-ratchanok-intanon-in-second-round

author img

By

Published : Mar 10, 2022, 7:42 PM IST

பெர்லினில் இன்று(மார்ச்.10) நடந்த ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தாய்லாந்து வீராங்கனை ராட்ஷனாக் இண்டணானிடம் மோதினார். 31 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் இறுதியில் 21-10, 21-15 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார்.

தொடக்கம் முதலே ராட்ஷனாக் ஆதிக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக நடந்த மற்றொரு போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, சீன வீராங்கனை ஜாங் யி மேனை எதிர்கொண்டார். இறுதியில் 14-21 21-15 14-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

மறுபுறம் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், சீனாவின் லு குவாங் சூவை 21-16, 21-23, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அசத்தினார். இதற்கு அடுத்தாக டென்மார்க்கின் முதல் நிலை வீரரான விக்டர் ஆக்செல்சனை எதிர்கொள்கிறார்.

இதையும் படிங்க: ICC Women World Cup 2022: இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.