பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் 13 பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ரபேல் நடாலும் - அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மோதுகின்றனர். நடால் தனது காலிறுதி ஆட்டத்தில் ஜோகோவிக்கையும் , ஸ்வெரேவ் தனது காலிறுதி ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸையும் வீழ்த்தி இருந்தனர்.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் மரின் சிலிச் , கேஸ்பர் ரூட் ஆகியோர் மோதுகின்றனர். பெண்கள் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் கோகோ காஃப் - இகாஸ்விட்டெக் மோதுகின்றனர், கோகோ காஃப் தனது அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை மார்டினா ட்ரெவிசனை 6க் 3 , 6க்கு 1 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இருந்தார். இகா ஸ்விட்டெக் தனது அரையிறுதி ஆட்டத்தில் டாரியா கசட்கினாவை 6க்கு 2 , 6க்கு 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இருந்தார்.