அடுத்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரலாற்று சிறப்பு மிக்க விளையாட்டு தொடரான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இதற்கான தகுதி சுற்று போட்டிகளில் இந்திய அணி சார்பாக பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அந்த வரிசையில் இந்தியாவின் நட்சத்திர குதிரையேற்ற வீரரான ஃபௌவுட் மிர்சா தகுதி பெற்று அசத்தியுள்ளார். மேலும் 20 ஆண்டுகளுக்குப்பிறகு குதிரையேற்ற பிரிவில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா சார்பாக தகுதி பெற்ற முதல் நபர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
அது மட்டுமின்றி இந்தியா சார்பாக குதிரையேற்ற பிரிவில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற மூன்றாவது இந்தியர் என்ற சாதனையையும் படைத்து ஃபௌவுட் மிர்சா அசத்தியுள்ளார். இதற்கு முன் இந்தியா சார்பாக இம்தியாஸ் அனீஸ், ஐஜே லம்பா ஆகியோர் குதிரையேற்ற பிரிவில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஸ்ஸலுக்கு ஷாக் கொடுத்த ஆப்கான் பந்துவீச்சாளர்!