இந்தியாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் மாஸ்டரும், நட்சத்திர சதுரங்க விளையாட்டு வீரருமாக வலம் வருபவர் விஸ்வநாதன் ஆனந்த். தமிழ்நாட்டை சேர்ந்த இவர் சதுரங்க விளையாட்டு போட்டிகளில் ஐந்து முறை உலகச்சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தவர்.
மேலும், இவர் தனது ஐம்பதாவது பிறந்தநாளையெட்டி கடந்த வெள்ளிக்கிழமை தான் எழுதிய ’மைண்ட் மாஸ்டர்’ எனும் புத்தகத்தை சென்னயில் நடைபெற்ற ஒரு விழாவில் வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், இது எனக்கு ஒரு நல்ல மைல்கல், கடந்த சில மாதங்களாக வகுப்பு தோழர்கள் அனைவரையும் சந்தித்து நான் உரையாடி வருகிறேன். மேலும் இந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் இந்த பிறந்தநாளில்தான் எனது புத்தகத்தை வெளியிட முடிந்தது என தெரிவித்தார்.
மேலும் தனது புத்தகத்தைப் பற்றி பேசிய ஆனந்த், இந்த புத்தகமானது ஒரு பொதுவான சுயசரிதையே. இருப்பினும் இந்த புத்தகம் என்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களை கொண்டது. இது சதுரங்கம் மற்றும் கணினி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியது. சதுரங்க விளையாட்டில் ஈடுபாடு இல்லாதவர்களும் இப்புத்தகத்தை விரும்புவர் என்றார்.
ஆனந்திடம் ஓய்வு குறித்து நமது செய்தியாளர் கேட்டபோது, அவர் எந்தவொரு தேதியையும் குறிப்பிட்டு பதிலளிக்காமல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அனைத்து தொடர்களிலும் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கு பிறகு வேண்டுமானால் எதிர்காலத்தைப் பற்றி முடிவு செய்து கொள்ளலாம் என கூறினார்.
இதையும் படிங்க:ஐஎஸ்எல் கால்பந்து: பெங்களூருவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை
!