ETV Bharat / sports

குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் ஜம்மு காஷ்மீர் வீரரின் பிரத்யேகப் பேட்டி!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்ற முன்னாள் பனிச்சறுக்கு வீரர் குல் முஸ்தபா தேவ் நமது ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகப் பேட்டியளித்துள்ளார்.

author img

By

Published : Mar 11, 2020, 4:43 PM IST

Exclusive: Meet Jammu and Kashmir's first winter Olympian Gul Mustafa Dev

இந்தியாவில் விளையாட்டுத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளம் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக, மத்திய அரசு சார்பில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் 2018ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பனியில் விளையாடும் போட்டிகளை மேம்படுத்தும் விதமாக, கேலோ இந்தியாவின் முதல் குளிர்காலப் போட்டிகள் மத்திய அரசு சார்பிலும், ஜம்மு காஷ்மீர் விளையாட்டுக் கவுன்சில் சார்பிலும் குல்மார்க்கில் நடைபெற்று வருகின்றன.

ஆனால், இந்த போட்டிகள் இந்தியாவில் பிரபலமடைவதற்கு முன்பே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்குப் பெருமை தேடித் தந்தவர் குல் முஸ்தா தேவ். ஸ்ரீநகரைச் சேர்ந்த இவர், 1988இல் கனடாவில் நடைபெற்ற 15ஆவது குளிர்காலப் போட்டிகளில் கலந்துகொண்டதன் மூலம், ஜம்மு காஷ்மீரிலிருந்து குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

1986இல் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கீயிங் போட்டியில், இவர் ஜயண்ட் ஸ்லலோம் பிரிவில் தங்கமும், ஸ்லலோம் பிரிவில் வெண்கலமும் வென்றார். இதுமட்டுமின்றி டவுன்ஹில் ஸ்கை ஸ்டைல் பிரிவிலும் வெண்கலம் வென்று அசத்தினார். பனிச்சறுக்குப் போட்டியில் இவரது அசாத்திய ஆட்டத்திறனைக் கண்டு பிரமித்த இந்திய குளிர்கால விளையாட்டு சம்மேளனம், 1986 மார்ச் 1ஆம் ஆண்டு முதல் 8 வரை ஜப்பானில் நடைபெற்ற முதல் ஆசிய குளிர்காலப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் தேர்வு செய்தது.

குளிர்காலப் போட்டிகளின் ஜாம்பவானாகத் திகழும் இவர், கேலோ இந்தியா குளிர்காலப் போட்டிகள் நடைபெற்றுவரும் தருணத்தில், தான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அனுபவம் குறித்து அவர் நமது ஈடிவி பாரத்திடம் பிரேத்யேகமாகப் பகிர்ந்துகொண்டார்.

குளிர்கால விளையாட்டு ஜாம்பவான் குல் முஸ்தபா தேவ்

குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்ற தருணமும் அனுபவமும் பற்றி?

"குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவாகும். 1988ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான போட்டிகள் நடைபெற்றன. அதில் நான் முதலிடம் பிடித்து கனடாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்றேன். அதன்மூலம் எனது வாழ்நாள் கனவு நனவாகியது. அந்த குளிர்கால ஒலிம்பிக்கில் ஸ்கீயிங் பிரிவில் நான் 68ஆவது இடத்தைத் தான் பிடித்திருந்தேன். ஆனாலும், ஒலிம்பிக்கில் பங்கேற்ற அந்தத் தருணம் என்னால் மறக்கவே முடியாது".

2011இல் அப்போதைய ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் துறை அமைச்சர் நவாங் ரிக்சின் ஜோரா, இவருக்கு குளிர்கால விளையாட்டில் சிறந்த பங்களிப்பு வழங்கியவருக்கான விருது வழங்கி கெளரவித்தது.

ஸ்கீயிங் பயிற்சியாளர் பற்றி?

ஸ்கீயிங்

"ஸ்கீயிங் பயிற்சியாளராக எனக்கு அரசாங்கம் சார்பில் இளையோர் விளையாட்டுத் துறையில் வேலை கிடைத்தது. தற்போது ஸ்கீயிங் போட்டியின் முதன்மைப் பயிற்சியாளராக இருக்கிறேன். 1993இல் ஸ்கீயிங் போட்டியிலிருந்து ஓய்வுபெற்ற பின் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நான் ஸ்கீயிங் போட்டியை கற்றுத்தந்துள்ளேன். அதிலிருந்து ஏராளாமானர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றுள்ளனர்"

மாணவர்களுக்கு ஸ்கீயிங் பயிற்சியளிக்க, உங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து ஆஃபர் வந்தது குறித்து?

"சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் ஸ்கீயிங் சம்மேளனம் தங்களது நாட்டு வீரர்களுக்கு ஸ்கீயிங் பயிற்சியளிக்குமாறு எனக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், நம் நாட்டில் திறமையுடன் இருக்கும் வீரர்களை மேம்படுத்த விரும்பியதால் அந்த வாய்ப்பை நான் மறுத்துவிட்டேன்".

காஷ்மீரில் ஸ்கீயிங் போட்டிக்கு வீரர்கள் மத்தியில் நல்ல எதிர்காலம் இருக்கிறதா?

"தற்போதைய இளம் வீரர்களுக்கு ஸ்கீயிங் போட்டி மீது அவ்வளவாக ஆர்வம் இல்லை. பனிமலையில் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல அவர்கள் லிஃப்ட் அல்லது வாகனத்தை எதிர்பார்க்கின்றனர். ஆனால், எங்களது கால கட்டத்தில் ஒரு பகுதியிலிருந்து மற்ற இடத்துக்குச் செல்ல, எங்களுக்கு ஸ்கீயிங் தவிர வேறு வாய்ப்பு இல்லை.

ஸ்கீயிங் எனப்படும் பனிச்சறுக்குப் போட்டி

தற்போது உள்ள தடகள வீரர்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறுவது சற்று கடினம்தான். ஏனெனில், அதற்கான தகுதிச் சுற்று போட்டியைத் தவிர எஃப்.இ.யஸ். புள்ளிகளைப் பெறவேண்டும் என்பதால், அதற்கு கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. தற்போதுள்ள வீரர்களிடம் அதைக் காண்பது மிகவும் கடினம்" என்றார்.

இதையும் படிங்க: 'ஸ்னோ போர்டிங் விளையாட்டு விரைவில் பிரபலமடையும்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.