சோனிபட் : ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த பஜ்ரங் புனியா, டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார்.
அந்தத் தொடரில் பஜ்ரங் புனியா, அரையிறுதியில் தோல்வியை சந்தித்திருந்தார். அதன்பின்னர் நடைபெற்ற மறுவாய்ப்பு போட்டியில் கஜகஸ்தான் வீரர் டவுலட் நியாஸ்பேகோவை ( Daulet Niyazbekov) 8-0 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தார்.
இந்தப் போட்டியில் கடைசி மூன்று நிமிடங்கள் மிக கடினமாக இருந்தது. இந்த வாழ்வா- சாவா போட்டியில் வென்று பஜ்ரங் புனியா வென்று புதிய வரலாறு படைத்து வெண்கல பதக்கத்தை வென்றார். இந்நிலையில், பதக்கத்துடன் நாடு திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது குறித்து ஈடிவி பாரத்திடம் தனது கருத்தை பகிர்ந்துகொண்ட பஜ்ரங் புனியா, “காயத்தை பொருட்படுத்தாது, பதக்கம் வெல்லும் முனைப்பில் ஆடினேன்” என்று தெரிவித்தார். மேலும் தனது வருங்கால திட்டங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
இதையும் படிங்க : பஜ்ரங் புனியா வெற்றியை முன்கூட்டியே கணித்த அவரது தாயார்!