ETV Bharat / sports

நம்பர் 1 குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் சிறப்பு பேட்டி! - குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல்

உலகின் நம்பர் 1 குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் ஈ டிவி பாரத் செய்திகளுக்காக சிறப்பு பேட்டியளித்துள்ளார்.

exclusive-boxer-amit-panghal-talks-about-his-preparations-for-tokyo-olympics

author img

By

Published : Jun 4, 2020, 5:23 AM IST

இந்தியா சார்பாக ஒலிம்பிக் தொடரின் குத்துச்சண்டை போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் அமித் பங்கல் தங்கம் வெல்வார் என மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஈடிவி பாரத் செய்திகளுக்காக அமித் பங்கல் அளித்த சிறப்பு பேட்டி இதே.!

லாக் டவுன் காலம் எவ்வாறு உள்ளது?

லாக் டவுன் காலத்தில் வழக்கம்போல் வீடுகளிலும், முகாம்களிலும் மேற்கொள்ளும் அதே பயிற்சிகள் தான். எங்களை ஃபிட்டாக வைத்துகொள்ள முயன்று வருகிறோம்.

ஒலிம்பிக் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது பற்றிய உங்களின் கருத்து?

என்னைப் பொறுத்தவரை ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டது நல்லது தான். எப்போது நடந்திருந்தாலும் கவலையில்லை. நான் எனது உடற்திறனை நன்றாக கவனித்து வருகிறேன். உலக தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளதால், எனது மன உறுதி அதிகமாக உள்ளது. ஒலிம்பிக் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது எங்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. பயிற்சிக்கும், தயாராவதற்கும் அதிக நேரம் கிடைத்துள்ளது. எங்களின் பிரச்னைகளை சரி செய்ய உதவியுள்ளது.

குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் சிறப்பு பேட்டி

தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய நேரத்தில், குத்துச்சண்டை பயிற்சி எப்படி மேற்கொள்கிறீர்கள்?

தற்போதைய சூழலில் எனது ஃபிட்னெஸில் கவனம் செலுத்தி வருகிறேன். உடற்திறன் சரியாக இருக்கும்போது போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியும். கரோனா வைரஸ் சூழல் கட்டுக்குள் வந்தபின் எங்களின் பயிற்சியைத் தொடங்குவோம்.

தேசிய விளையாட்டு முகாமை மிஸ் செய்கிறீர்களா?

தேசிய முகாமில் உள்ள சூழல் வீட்டில் இருக்காது. நிச்சயம் முகாமை மிஸ் செய்கிறேன். அங்கு எங்களுக்குள் பயிற்சியின்போது நல்ல புரிதல்கள் இருக்கும். விளையாட்டுத் தனமான விஷயங்கள் நடக்கும். அதனை ரொம்பவே மிஸ் செய்கிறேன்.

குத்துச்சண்டை தவிர்த்து மற்ற எந்த விளையாட்டு ரொம்ப பிடிக்கும்?

மல்யுத்தமும், கால்பந்தும் அதிகமாக பிடிக்கும். ப்ரோ லீக் போட்டிகள் அனைத்தையும் தவறாமல் பார்ப்பேன். கால்பந்து உலகக்கோப்பையை தொடர்ந்து ஃபோலோ செய்வேன். உக்ரைனின் வாசில் (குத்துச்சண்டை) என்ற வீரரை மிகவும் பிடிக்கும். எனது ஆட்டத்தில் அவரையே ஃபாலோ செய்கிறேன்.

தற்போது பயிற்சிக்கு பின் என்ன செய்கிறீர்கள்?

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் குழந்தைகளுடன் இணைந்து பட்டம் விடுகிறேன். பயிற்சிக்கான வீடியோக்கள் பார்ப்பது, தொலைக்காட்சி தொடர்கள் பார்ப்பது என நாள்கள் செல்கிறது. அக்‌ஷய் குமார், ரந்தீப் ஹூடா ஆகியோர் பிடித்த நடிகர்கள். வீட்டில் டயட் மேற்கொள்வது சிரமமாக உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.